தக்காளி புள்ளி வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

2 comments

தக்காளி புள்ளி வாடல் நோய்: தக்காளி இந்தியாவில் மிக அதிகமாக சாகுபடி செய்யக்கூடிய பயிராகும். இந்தியாவில் மட்டும்  ஆண்டுக்கு 210 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 சதவீதம் தக்காளி பூச்சினாலும் நோயினாலும் பதிக்கப்படுகிறது. இத்தகை பூச்சி, நோய்களில் புள்ளி வாடல்  நோய் தக்காளியை பாதிக்கும் முக்கியமான ஒரு நோயாகும். 

தக்காளி புள்ளி வாடல் நோய், ஓர்தொடோஸ்போ நோய்க்கிருமியைச் சேர்ந்தது.  இந்நோயை ஆஸ்திரேலியாவில் 1919 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். இந்நோய் எண்ணூறு மேலான தாவர வகைகளைப் பாதிக்கக்கூடியவை. இந்நோய் இலைப்பேன்களால் பரவக்கூடியவை. இந்த நோய் செடிகளைத் தொற்றிய பிறகு 21 முதல் 48 மணி நேரத்திற்கு பிறகுதான் அதன் அறிகுறிகள் தெரியும். 

இந்த நோய்வாய்ப்பட்ட பழங்கள், சந்தையில் விற்க முடியாமல்  விவசாயி பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்படுவர். இந்த நோய் பயிரின் அனைத்து நிலையிலும் (நாற்று, வளர்ச்சி நிலை, பூக்கும் நிலை, பழுக்கும் நிலை) வரக் கூடியது. இந்நோய் கோடை காலங்களில் எற்படும் அதிக வெப்பம் காரணமாக அதிகம் பரவும். எண்ணெய்யில் இதைப் பரப்பும் இலைப்பேனின் இனத்தொகை அதிகமாக இருக்கும். 

தாக்களில் வாடல் நோய்   இலைகளில் வாடல் நோய்

நோய் பரப்பும் பூச்சி 

தக்காளி புள்ளி வாடல் நோய் 10 வித இலைப்பேன்களால் பரவக்கூடியவை. இந்நோயை பொதுவாக பரவிசபினோஸ் (Parvispinous) என்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறுதோத்ரிப்ஸ் டார்சலிஸ் (scirtothrips dorsalis) என்ற மிளகாய் இலைப்பேனால் பரவக்கூடியது. இவ்வகை இலைப்பேன் இலையின் சாரை அடிப்பாகத்திலிருந்து உறிந்து வாழ்பவை. எனவே இத்தகைய இலை பேன்களைக் கண்டறிவது கடினம், இதனால் புள்ளி வாடல் நோயைக் கண்டறிவது இன்னும் கடினமானது. 

  • தக்காளி புள்ளி வாடல் நோய் அதிக வெப்பமும் ஈரப்பதமும் உள்ள மாதங்களில் பரவும். கோடைக் காலங்களில் இந்நோய் பரவக்கூடிய இலைப்பேனின் இன எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வேகமாக பரவும்.
  •  பயிர்களுக்கு அதிக அளவு அம்மோனியா நைட்ரஜனை (யூரியா, அம்மோனியம் சல்பேட், 19:19:19 ... போன்றவை) பயன்படுத்துதல்  மண்ணில்  உள்ள நைட்ரஜன் அதிகமாகவும் மற்றும் போரான் அளவு குறைவாக இருந்தாலும் நோய் பாதிப்பு அதிகரிக்கும்.
  • முறையற்ற மக்காத கரிம உரம், கோழி எரு, செம்மறி ஆடு எருவைப் பயன்படுத்தலாம். 
  • சுற்றுச்சூழல் நிலவரமும் பயிரின் நோய் எதிர்ப்புச் சக்தியை திர்மணிக்கும். உதாரணத்திற்கு நாளின் பகல் நேரம், சூரிய ஓலின் தீவிரம், வகை மற்றும் பயிரின் வயது போன்றவை. இது அனைத்தும்  நோய்த்தொற்றின் தீவிரத்தைத் தீர்மானிக்கும்.
  • நாற்றுப் பண்ணையில் வளர்க்கப்பட்ட நாற்றுகளில் இந்த நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஏனெனில், நாற்றுகளைக் கையாளும் போது வைரஸ் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • இந்த வைரஸ் களைகளில் இருக்கும். மேலும் இந்நோய்யய் பரப்பும் பூச்சியான இல்லைப்பேன்னும் இதில் இருக்கலாம். 
  • இலைப்பேன்கள் செடியிலிருந்து செடிக்கு நகரும்போது, நோய் பாதித்த செடியிலிருந்து மற்ற செடிகளுக்குப் பரவுகிறது. 
இலைப்பேன் தாக்கிய இலை இலைப்பேன் தாக்கிய இலை 

தக்காளி புள்ளி வாடல் நோய் அறிகுறிகள் 

  • வளர்ச்சி குன்றி இளம் இலைகள் பழுப்பு நிறமாக மாறும் அல்லது இலைகளில் ஊதா நிற  நரம்புகள், புள்ளிகள் தென்படலாம். பொதுவாக இவை தாவறத்தின் மேல் பகுதியில் காணப்படும்.
  • இந்நோய் இலைகள், தண்டு மற்றும் முக்கியமாகப் பழங்களில் காணப்படும். 
  • அடர் பழுப்பு நிற கோடுகள் தண்டுகளில் உருவாகும்.
  • சிறிய, கருப்பு புள்ளி வட்டம் இளம் இலைகளில் தென்படும். 
  • இலைகளில் அடர் ஊதா, பழுப்பு நிற வளையப் புள்ளிகள் தோன்றும். இலைகளில் உள்ள பழுப்பு நிறம் பெரிதாகும்போது இலைகள் வளைந்து சுருங்கும்.
  • இளம் செடிகள் வாட ஆரம்பித்து இறுதியில் கடுமையான நோயுற்ற நிலைகளில் இறக்கலாம். ஆனால் முதிர்ந்த தாவரங்கள் உயிர் பிழைக்கலாம், ஆனால் அவற்றின் பழங்கள் நிறம் மாறி முழுமையாகப் பழுக்காமல் பழங்களைத் தரக்கூடும்.
  • பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்குப் பல புள்ளிகள் காணப்படும். 
  • பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் தோன்றும். 
  • பழங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புடைப்புகள் ஏற்படும்.
  • பழங்கள் சிதைந்து சீரற்ற முறையில் பழுக்க வைக்கும். 
  • செடியின் ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால், அது காய்க்காது.

தக்காளி புள்ளி வாடல் நோய் மேலாண்மை 

  • நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்துங்கள்.
  • நடவு செய்யும் போது வைரஸ் இல்லாத நடவுப் பொருட்களைப் பயன்படுத்தவும்.
  • பாதிக்கப்பட்ட அனைத்து செடிகளையும் அகற்றி, பரவாமல் இருக்க நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களில் அழிக்கவும் (எரிக்கவும்).
  • வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் வயல் நிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்பு பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
  • இந்நோயை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் கட்டுப்படுத்தவும். இதற்கு பூச்சிக்கொல்லி மற்றும் நோய் கிருமிக்கொல்லி அடிக்கவும். 
  • களைகளைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் அவை வைரஸ் மற்றும் இலைப்பேன்  ஆகிய இரண்டிற்கும் மாற்று உனவாக செயல்படும். எனவே வைரஸ் ஒரு பருவத்திலிருந்து அடுத்த பயிர் பருவத்திற்கு எளிதாக மாறும். 
  • பழைய பயிர்களை அழிப்பதன் மூலமாகவோ, உழுவதன் மூலமாகவோ அல்லது கையேடு முறையாக அகற்றுவதன் மூலமாகவோ வயலில் சுகாதாரத்தை மேம்படுத்துங்கள். இல்லையெனில் பாதிக்கப்பட்ட குப்பைகள் தொற்றுக்கு பரவுவதற்கு முழ காரணமாக மாறிவிடும்.
  • நோய் பரப்பும் பூச்சி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும்.
  • பயிர் சுழற்சியைப் பின்பற்றவும்.
  • தக்காளி புள்ளி வாடல் (ToSPOw) நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அருகில் நடவு செய்வதைத் தவிர்க்கவும். 
  • நோய் பரப்பும் பூச்சி எண்ணிக்கையை (இலைப்பேன்) விரட்ட உயிரின மக்கும் பிளாஸ்டிக் தழைக்கூளத்தை பயன்படுத்தவும்.

வாடல் நோய்க்கான தெளிப்பான்

முதல் ஸ்பிரே 

ரோஜென்ட் 2ml/l  + ஈக்கோ நீம் 1 ml/l

2ஆவது ஸ்பிரே 7 - 8 நாட்களில் 

பெரிபெக்ட் 1 ml /ல்  + சம்பிரம (1 மாத்திரை 15 லிட்டர் தண்ணீருக்கு)  +  ஈக்கோ நீம் 1 ml/l

3ஆவது ஸ்பிரே 7 - 8 நாட்களில் 

வி பிண்ட / நோ வைரஸ் 2ml /l  + மகனாம் 0.5 grm / l 

 

எழுத்து: சத்யா கோவிந்தசாமி


2 comments


  • Guru Murthy

    Good morning


  • Guru Murthy

    No


Leave a comment

यह साइट reCAPTCHA और Google गोपनीयता नीति और सेवा की शर्तें द्वारा सुरक्षित है.


Explore more

Share this